மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு இடையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ, என்.சி.டி.இ., என்.ஐ.ஓ.எஸ், என்.சி.இ.ஆர்.டி மற்றும் கே.வி.எஸ் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதி உள்ளது
Posted On:
03 APR 2020 3:27PM by PIB Chennai
கொவிட்-19 அச்சுறுத்தல் இருக்கும் இந்த கடுமையான காலகட்டத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ, என்.சி.டிஇ., என்.ஐ.ஓ.எஸ், என்.சி.இ.ஆர்.டி மற்றும் கே.வி.எஸ் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதி உள்ளது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற இந்த அமைப்புகளுக்கு அமைச்சகத்தின் செயலாளர் திரு. அமித் கரே அனுப்பி உள்ள கடிதத்தில், இந்திய அரசு, பொதுத்துறை, தனியார் கூட்டுப் பங்கேற்பில் கொவிட்-19க்கு எதிராகப் போராடுவதற்கு அண்மையில் ஆரோக்கியசேது (AarogyaSetu App) செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. மக்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமா என்பதை தாங்களாகவே மதிப்பீடு செய்து கொள்ள இந்த செயலி உதவுகிறது. மற்றவர்களுடன் மேற்கொண்ட சந்திப்புகள், அதிநவீன புளூடூத் தொழில்நுட்பம், அல்காரிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. இந்தச் செயலி மாணவர்கள், பேராசிரியர்கள் / ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்தச் செயலியை கீழ்வரும் இணைப்புகளில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
ஆப்பிள் ஃபோன்களுக்கு : itms-apps://itunes.apple.com/app/id505825357
ஆன்ட்ராய்டு ஃபோன்களுக்கு : https://play.google.com/store/apps/details?id=nic.goi.arogyasetu
சுயபராமரிப்பின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நடவடிக்கைக்கான ஒரு செயல் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கி உள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது நமது மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
சுய பராமரிப்பில் ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி நடவடிக்கைள் குறித்து தெரிந்து கொள்ள தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும் : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/Immunity%20Boosting%20-%20%20AYUSH%20Advisory.pdf
*****
(Release ID: 1610690)