தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியா டிடியை பார்க்கிறது, இந்தியா கொரோனாவை எதிர்த்து போரிடுகிறது
प्रविष्टि तिथि:
02 APR 2020 7:20PM by PIB Chennai
பொது முடக்கத்தின் போது, புகழ்பெற்ற, பழம்பெரும் தொடர்களை டிடி நேஷ்னல் மற்றும் டிடி பாரதியில் மறு ஒளிபரப்பு செய்வதன் மூலம், இந்தியர்களின் உள்ளங்களில் தேசிய ஒளிபரப்பாளர் என்னும் தனது இடத்தை தூர்தர்ஷன் மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்திய தொலைக்காட்சி நேயர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, பழைய பொக்கிஷங்களை ஒளிபரப்புவதன் மூலம், மக்களை வீடுகளிலேய இருக்க செய்யும் தனது குறிக்கோளை தூர்தர்ஷன் அடைந்துள்ளது. தொலைக்காட்சி பார்வையாளர்களை ஆய்வு செய்ய ஆரம்பித்த 2015 முதல் இன்று வரை ராமாயண் தொடரின் மறு ஒளிபரப்பு தான் இந்தி பொது பொழுதுபோக்கு தொலைகாட்சிகளில் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது.
கோவிட்-19 பெரும்பரவலை எதிர்கொள்ள அறிவிக்கப்பட்ட 21 நாள் பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு, 1980களின் புராணத் தொடர்களான 'ராமாயணம்' மற்றும் 'மகாபாரதம்' ஆகியவற்றை மறு ஒளிபரப்பு செய்ய பொது சேவை ஒளிபரப்பாளர் (தூர்தர்ஷன்) முடிவு செய்தது. இந்த காவியங்களை மறு ஒளிபரப்பு செய்ய பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்த நிலையில், வீட்டில் உள்ள பார்வையாளர்களுக்கு ஈடுபாட்டுடன் கூடிய பொழுதுபோக்கை அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதே போன்று, மக்கள் கோரிக்கையின் அடிப்படையில், தன்னுடைய இதர புகழ்பெற்ற தொடர்களான சக்திமான், ஸ்ரீமான் ஸ்ரீமதி, சாணக்யா, தேக் பாய் தேக், புனியாட், சர்க்கஸ் மற்றும் பியோம்கேஷ் பக்ஷி ஆகியவற்றையும் டிடி நேஷ்னலில் அறிமுகப்படுத்தி உள்ளது. மகாபாரத்துடன், அலிஃப் லைலா, உபநிஷத் கங்கா ஆகியவற்றையும் டிடி பாரதியில் அறிமுகப்படுத்தி உள்ளது.
***
(रिलीज़ आईडी: 1610662)
आगंतुक पटल : 183