பாதுகாப்பு அமைச்சகம்
கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்புக்காக இணைப்பு அடைப்புடன் கூடிய உயிரி உடையை தயார் செய்துள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்
Posted On:
02 APR 2020 6:47PM by PIB Chennai
கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடும் மருத்துவ, துணை மருத்துவ மற்றும் இதர பணியாளர்களை ஆட்கொல்லி வைரஸிடம் இருந்து பாதுகாப்பதற்காக, உயிரி உடை ஒன்றை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. வெளிப்பூச்சுடன் கூடிய குறிப்பிட்ட வகையிலான துணியால் இந்த தனிப்பட்ட பாதுகாப்பு உடை தயாரிக்க, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் பல்வேறு ஆய்வகங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், துணித்துறை, வெளிப்பூச்சு மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தங்களுக்கு உள்ள அறிவையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி உள்ளனர்.
தொழில் துறை உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த உடை, துணி அளவுருக்கள் மற்றும் செயற்கை ரத்தத்துக்கு எதிரான பாதுகாப்புக்காக கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆடைகளுக்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் விதித்துள்ள அளவுகோளைவிட இந்த உடை கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கும் வகையில் உள்ளது.
அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, கோவிட் 19 தொற்றை எதிர்த்து போராடுவதில் முன்னணியில் உள்ள மருத்துவ, துணை மருத்துவ மற்றும் இதர பணியாளர்களின் பாதுகாப்பு கவசமாக இந்த உடைகள் இருக்கும் வகையில் அனைத்து முயற்சிகளையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் எடுத்து வருகிறது,
******
(Release ID: 1610655)
Visitor Counter : 286