நிதி அமைச்சகம்

கோவிட் 19 முழு அடைப்பின் காரணமாக மூன்றாம் நபர் மோட்டார் வாகனக் காப்பீடு மற்றும் உடல்நல பாலிசிதாரர்களுக்கு அரசு வழங்கியுள்ள நிவாரணம்

மோட்டார் வாகன மற்றும் உடல்நலக் காப்பீடு பாலிசிகளை புதுப்பிப்பதற்கான காலக்கெடு 21 ஏப்ரல் 2020 வரை நீடிப்பு

प्रविष्टि तिथि: 02 APR 2020 1:13PM by PIB Chennai

கோவிட் 19 முழு அடைப்பின் காரணமாக, மூன்றாம் நபர் மோட்டார் வாகனக் காப்பீட்டுதாரர்களுக்கும், உடல்நல பாலிசிதாரர்களுக்கும், அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. 25 மார்ச் 2020 முதல் 14 ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட வேண்டிய மோட்டார் வாகனக் காப்பீடு மற்றும் உடல்நலக் காப்பீடு பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான தேதி 21 ஏப்ரல் 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது உங்களிடம் உள்ள 25 மார்ச் 2020 முதல் 14 ஏப்ரல் 2020 வரை வரையிலான காலகட்டத்திற்குள் புதுப்பிக்கப்பட வேண்டிய பாலிசிகளை, புதுப்பித்துக் கொள்வதற்கான காலக்கெடு 2020ம்  ஏப்ரல் 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

மூன்றாம் நபர் மோட்டார் வாகன காப்பீடு:

 

தற்போது உங்களிடம் உள்ள, கட்டாய மூன்றாம் நபர் மோட்டார் வாகனக் காப்பீடு பாலிசி 25 மார்ச் 2020 முதல் 14 ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டத்திற்குள் காலாவதியாவதாக இருந்தால், உங்களால் அந்தப் பாலிசியை,  நாடு தழுவிய முழு அடைப்பின் காரணமாக புதுப்பித்துக் கொள்ள முடியாவிட்டால்,  நீங்கள் அந்த மோட்டார் வாகனக் காப்பீட்டுப் பாலிசியை 21 ஏப்ரல் 2020 தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

 

உடல் நலக் காப்பீட்டு பாலிசி:

இதேபோல், உங்களுடைய உடல் நலக் காப்பீட்டு பாலிசி 25 மார்ச் 2020 முதல் 14 ஏப்ரல் 2020 வரையிலான காலத்திற்கு உட்பட்ட தேதிகளில் காலாவதியாகி, புதுப்பிக்கப்பட வேண்டியதாக இருந்தால், நீங்கள் இந்தப் பாலிசிகளை 21 ஏப்ரல் 2020 தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.


(रिलीज़ आईडी: 1610312) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Punjabi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam