அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தொற்று பரவாமல் தடுக்க இயலும் பூச்சு கண்டுபிடிப்பு: ஜே என் சி ஏ எஸ் ஆர்

Posted On: 01 APR 2020 6:10PM by PIB Chennai

கோவிட் 19 உட்பட பல்வேறு வகையான வைரஸ் கிருமிகளைக் கொன்று, இவற்றினால் பரவும் நோய்களை, ஒரே முறையிலேயே குணப்படுத்தக்கூடிய, நுண்ணுயிர்களுக்கு எதிரான பூச்சு ஒன்றை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும், தன்னாட்சி நிறுவனமான, ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. துணிகள், நெகிழி போன்ற தளங்களில், நுண்ணுயிரிகளுக்கு எதிரான இந்தப் பூச்சைப் பூசினால், கிருமிகள் கொல்லப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

 இந்த சக பிணைப்புப் பூச்சு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை, மெட்டீரியல் அண்ட் இன்டர்பேஸ் (Material and Interface) என்ற ஆராய்ச்சி இதழால், ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இப்பூச்சு, இன்புளுவென்சா வைரஸ்; தற்போதைய மருந்துகளுக்குக் கட்டுப்படாத, தொற்று விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் காளான்; மெதிசிலினுக்குக் கட்டுப்படாத  நுண்ணுயிரி (methicillin-resistant Staphylococcus aureus );  ஃப்ளூகனாஸோலுக்குக் கட்டுப்படாத C. albicans spp எனும் கிருமி (fluconazole-resistant C. albicans spp) ஆகியவற்றைமுழுமையாகக் கொன்றுவிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்கள் அறிவுக்கு எட்டிய வரை, இது நாள் வரை, அனைத்து வகையான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், காளான்கள் ஆகியவற்றைக் கொல்லக்கூடிய சக பிணைப்புப் பூச்சு உத்திகள் எதுவும் இல்லை” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள மூலக்கூறுகள், பல்வேறு தளங்களில், புற ஊதாக்கதிர்களின் தாக்கத்துடன் (அல்ட்ரா வயலட் இராடியேஷன்) இரசாயன ரீதியாக, குறுக்கிணைவு செய்யும் திறன் கொண்டவை.

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்தப் பூச்சு பயனளிப்பதாக இருந்தால், இந்த மூலக்கூறுகளை ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்பு (Contract Research Organisation) ஒன்றின் மூலமாக, பெரிய அளவில் தயாரிக்க இயலும். முகக்கவசம், கையுறை, மருத்துவ கவுன்கள் உடைகள் போன்ற பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் மீது, இந்தப் பூச்சைப் பூசலாம். மருத்துவமனைகளிலிருந்து ஏற்படக்கூடிய தொற்றுக்களையும் தவிர்க்கும் வகையில், இதர மருத்துவ இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மீதும் இந்தப் பூச்சைப் பயன்படுத்தலாம்.

  



(Release ID: 1610197) Visitor Counter : 236