நிதி அமைச்சகம்
கொவிட்-19ஐ எதிர்கொள்ள புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 1,98,67,680/- வழங்கியது இந்தியப் பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம்
Posted On:
01 APR 2020 5:54PM by PIB Chennai
கொவிட்-19ஐ எதிர்கொள்ளத் தேவைப்படும் முக்கிய கருவியான, 45 வென்டிலேட்டர்களை (நுரையீரலுக்குள் உயிர்க்காற்றை அனுப்பும் இயந்திரம்) வாங்குவதற்காக, ரூ.1,98,67,680 தொகையை (ஒரு கோடியே 98 லட்சத்து 67 ஆயிரத்து அறுநூற்று எண்பது), புது தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு (எய்ம்ஸ்), பெரு நிறுவன சமுதாயப் பொறுப்பின் படி இந்தியப் பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம் வழங்கியுள்ளது.
(Release ID: 1610194)
Visitor Counter : 93