பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத்துறையின், கொவிட்-19 குறித்த குறைபாடுகளுக்கான தேசிய கண்காணிப்பு முகப்பு தளத்தைத் தொடங்கினார் டாக்டர்.ஜித்தேந்திர சிங்
Posted On:
01 APR 2020 2:11PM by PIB Chennai
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர்.ஜித்தேந்திர சிங், இன்று கொவிட்-19 குறித்த பொதுமக்கள் குறைதீர்வுத் துறையின் தேசிய கண்காணிப்பு முகப்பு தளத்தைத் தொடங்கினார். இது தேசிய கண்காணிப்பு முகப்பு தளம், https://darpg.gov.in என்ற பெயரில் உருவாக்கப்பட்டு ,செயல்படுத்தப்படுகிறது. அனைத்து அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் கண்காணிப்பு முறை மூலம் பெறப்படும் கொவிட்- 19 தொடர்பான குறைபாடுகள் முன்னுரிமை அடிப்படையில், பொதுமக்கள் குறைதீர்வுத் துறையின் தொழில்நுட்பக் குழுவால் கண்காணிக்கப்படுகின்றன. கொவிட் -19 தொடர்பான பொது மக்களின் புகார்களையும், ஆலோசனைகளையும் ஆய்வு செய்து அவற்றுக்கு உரிய தீர்வு காண்பதற்காக, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் கீழ் அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட 10 அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத்துறை இந்த தேசிய கண்காணிப்பு முகப்பு தளத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். ஜித்தேந்திர சிங், கொவிட்-19 தொடர்பான குறைபாடுகளுக்கு உரிய காலத்தில் தீர்வு காண மோடி அரசு எடுத்துள்ள முயற்சி இது என்றும், இந்தக் குறைபாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, 3 நாட்களில் தீர்வு காணவேண்டும் என்று அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். முதல் நாளில், மத்திய அரசு சார்ந்த 262 குறைபாடுகள் மற்றும் மாநில அரசுகள் தொடர்பான 83 குறைபாடுகளின் நிலவரம் குறித்து தாம் நேரடியாக ஆய்வு செய்ததாகவும், உரிய நடவடிக்கைக்கு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய கண்காணிப்பு முகப்பு தளம் தொடங்கப்பட்ட முதல் நாளில்,, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பற்றிய 43 குறைபாடுகளும், வெளியுறவு அமைச்சகம் குறித்த 31 குறைபாடுகளும், நிதி அமைச்சகத்தின் 26 குறைபாடுகளும் வரப்பெற்றன. தனிமைப்படுத்துதல் வசதி, பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்காதது பற்றிய புகார்கள், அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பான புகார்கள், தேர்வு குறித்த புகார்கள், கடனுக்கான வட்டியைத் திரும்பச் செலுத்துவதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள், வெளிநாட்டவர்களை அகற்றுவது ஆகியவை இதில் அடங்கும். தினசரி இவற்றை உயர்மட்ட அளவில் கண்காணித்து, அவ்வப்போதைய தகவல்களை இந்தத் தளம் வழங்கும்.
****
(Release ID: 1609971)
Visitor Counter : 362
Read this release in:
English
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam