கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கொவிட்-19 பரவும் நிலையில், துறைமுகப் பயன்பாட்டாளர்களுக்கு கட்டணங்கள், அபராதங்கள் விதிக்க வேண்டாம் என அனைத்து பெரிய துறைமுகங்களுக்கும் கப்பல் துறை அமைச்சகம் அறிவுரை
प्रविष्टि तिथि:
31 MAR 2020 9:16PM by PIB Chennai
கொவிட்-19 பரவலால் நாடு முழுவதும் 21நாள் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, மார்ச் 22 முதல், ஏப்ரல் 14 வரையிலான முடக்க காலத்தில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவதில் ஏற்படும் தாமதத்துக்கு அபராதம் விதிப்பதில் சலுகை, அபராதக்குறைப்பு, சுணக்க கட்டணம், வாடகை, பிற கட்டணங்கள் போன்றவற்றை விதிப்பது போன்ற பெரிய துறைமுகங்களின் நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை கப்பல் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
(रिलीज़ आईडी: 1609830)
आगंतुक पटल : 266