நிதி அமைச்சகம்
வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (சில விதிகள் தளர்வு) அவசரச் சட்டம், 2020ஐ நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது
प्रविष्टि तिथि:
31 MAR 2020 10:04PM by PIB Chennai
கொவிட் 19 பரவலைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் தொடர்பான பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் 24.03.2020 தேதியிட்ட பத்திரிகை குறிப்பு மூலம் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக, வரிவிதிப்பு மற்றும் பினாமி சட்டங்களில் பல்வேறு கால அவகாசங்களை நீட்டிப்பதற்கு, அரசு 31.03.2010 அன்று ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டங்களின் கீழ் உள்ள விதிகள் அல்லது அறிவிக்கைகளில் இருக்கும் காலக்கெடுக்களை நீட்டிப்பதற்கும் இது வழிவகை செய்யும்.
நாவல் கொரோனா வைரஸ் (கொவிட் 19) உலகின் பல்வேறு நாடுகளில் பரவி மக்களின் உயிர்களுக்குப் பெரும் சேதம் விளைவித்துள்ளதால், உலக சுகாதார அமைப்பாலும், இந்திய அரசு உள்ளிட்ட பல்வேறு அரசுகளாலும் பெரும் தொற்று என்று அழைக்கப்பட்டு வருவது நினைவிருக்கலாம். சமூக இடைவெளியே இதன் பரவலைத் தடுக்க சிறந்த வழி என்று அனைவராலும் ஒரு மனதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதால், நாட்டில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் வரி செலுத்துவோருக்கு விதிகளைக் கடைபிடிப்பதில் உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து துறைகளிலும் சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் தொடர்பான பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் 24.03.2020 தேதியிட்ட பத்திரிகை குறிப்பு மூலம் அறிவிப்புகள் வெளியிட்டார்.
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1609734
(रिलीज़ आईडी: 1609809)
आगंतुक पटल : 377