உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
2020 மார்ச் 26 முதல் 30 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 62 உயிர்காப்பு உடான் விமான சேவைகள் இயக்கப்பட்டு 15.4 டன்களுக்கும் அதிகமான பொருட்கள் கையாளப்பட்டுள்ளன
Posted On:
31 MAR 2020 7:14PM by PIB Chennai
கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, நாடு முழுக்கவும், வெளியிலும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்வதற்கு ``உயிர்காப்பு உடான்'' விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த முன்முயற்சியின் கீழ், 2020 மார்ச் 26 முதல் 30 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 62 உயிர்காப்பு உடான் விமான சேவைகள் இயக்கப்பட்டு 15.4 டன்களுக்கும் அதிகமான பொருள்கள் கையாளப்பட்டுள்ளன. இவற்றில் 45 சேவைகள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டுள்ளன.
(Release ID: 1609803)
Visitor Counter : 230