வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் மருந்துகள் கிடைக்கும் நிலையை மேம்படுத்தவும், நாட்டின் எல்லைக்குள் சுகாதார அலுவலர்கள் எளிதில் சென்று வருவதற்கான வசதிகளை செய்திடவும் இந்தியா அழைப்பு

மருத்துவம் மருந்துப் பொருள்களின் உயர் தரம் மற்றும் கட்டுபடியான விலையில் பயன்தரும்
நிலை நம்பகத்தன்மைக்கு உரிய நாடாக இந்தியா உள்ளது - திரு. பியூஷ் கோயல் கருத்து;

ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் தங்கள் சந்தைகளில் தாராள அனுமதி அளிக்கவும், பொருட்கள் கையிருப்பு வசதிகளை தொடர்ந்து, எளிமையாகப் பயன்படுத்துவதை
உறுதி செய்யவும் முடிவு

Posted On: 31 MAR 2020 12:04PM by PIB Chennai

நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு கட்டுப்படியான விலையில் மருந்துகள் கிடைக்கும் நிலையை மேம்படுத்தவும், தேச எல்லைக்குள் சுகாதார அலுவலர்கள் எளிதில் பயணிப்பதற்கு வசதிகள் செய்து கொடுப்பதில் உலகளாவிய கட்டமைப்பு முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஜி 20 நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பேசிய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பன்முக உத்தரவாதங்களை கடைபிடிப்பதன் அவசியம் மற்றும், இப்போதைய சவால்களை எதிர்கொள்வதில் செம்மையான செயல்பாடுகளை மேம் படுத்துதலின் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

பல சவால்கள் இருந்தபோதிலும், எதிர்பார்த்த பலன்களைத் தரும் வகையிலான, கட்டுபடியாகும் விலையிலான மருந்துகள் மற்றும் பார்மசூடிக்கல், மருத்துவப் பொருட்களின் உயர்வான தரம் ஆகியவற்றுக்கு நம்பகமான நாடாக இந்தியா உள்ளது என்று திரு. கோயல் கூறினார். உலகில் சுமார் 190 நாடுகளுக்கு இந்த விஷயத்தில் நம்பகமான நாடாக இந்தியா இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ``ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மேம்பட்டிருக்கும் நிலையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அதிகரித்துள்ள நிலையில், இப்போது ஏற்பட்டுள்ளதைப் போன்ற நெருக்கடியில் உலகிற்கு சேவையாற்றும் தன் திறன்களை இந்தியா இன்னும் மேம்படுத்திக் கொள்ள முடியும். இந்தக் குறைபாடுகளுக்குத் தீர்வு கண்டு, வாழ்வை, வாழ்க்கை நிலையை, ஏழைகளுக்கு உணவு மற்றும் சத்துமிகுந்த உணவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைப்பதை உறுதி செய்வதற்குப் பொருத்தமான நடைமுறைகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்'' என்று அவர் கூறினார்.
 

உலக நாடுகளுடன் இந்தியா ஒன்றுபட்டு நிற்பதாகக் கூறிய அமைச்சர், சுகாதார அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இந்த நோய்ப் பரவலுக்கு எதிரான போரில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார். வளரும் நாடுகளும், எல் டி சிகளும்  இந்த ஆபத்துக்கு எளிதில் ஆட்படும் நிலையில் உள்ளன என்று கூறிய அவர், முன் எப்போதும் இல்லாத வகையிலான நோய்த் தொற்று நிலைமையை எதிர்கொள்ளத் தேவையான ஆதார வளங்கள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுணுக்கத் திறன்கள் இல்லாததே அதற்குக் காரணம் என்று தெரிவித்தார்.
 

முன் எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற சவால்களை சந்திப்பதில் புதுமை சிந்தனைகள், கூட்டு முயற்சிகள், ஆக்கபூர்வமான முயற்சிகள் உலகம் முழுக்க எடுக்கப்பட வேண்டும் என்று திரு. கோயல் கூறினார். ``நமது கூட்டு செயல்பாடுகள், விதிகளின் அடிப்படையிலான பன்முக செயல்பாடுகளை பின்பற்றியதாகவும், வர்த்தகம் மற்றும் பிற துறைகளை மையமாகக் கொண்ட வளர்ச்சி முறையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். சரக்குகள் மற்றும் சேவைகள் கிடைக்கச் செய்வதை நாம் உறுதி செய்தாக வேண்டும். அதிமுக்கியமாக நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப, முக்கியமான மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது. வர்த்தகத்துக்கான வசதிகளை செய்து கொடுக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். தேவையான இடங்களில் சுங்கத் துறையின் விதிகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம். இறக்குமதியாளர்கள் பல்வேறு அனுமதிகளுக்கு உண்மை ஆவணங்களை வங்கிகளிடம் சமர்ப்பித்தலையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். கூடுதலாக, முக்கியமான மருந்து பொருட்கள், மருத்துவ சாதனங்கள், நோய் கண்டறியும் சாதணங்கள் மற்றும் உபகரணத் தொகுப்புகள் மற்றும் சுகாதார அலுவலர்கள், ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி எல்லைகளுக்குள் குறுகிய அவகாசத்தில் பணியில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்'' என்று அமைச்சர் கூறினார்.

 

``நமது தலைவர்களின் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு, உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாத்து, சர்வதேச வர்த்தக தடங்கல்களை நீக்குவது, உலக சந்தை தள்ளாடும் சூழ்நிலையில் நியாயமான, நிலையான, விதிமுறைகள் அடிப்படையிலான உலக வர்த்தக நடைமுறைகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஒன்றுபட்டு முயற்சிகள் எடுக்க வேண்டும். அனைவருடைய நலன் மற்றும் வளமைக்கு உதவும் வகையில் அவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேசங்கள் தங்களது குடிமக்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்வதுடன், தேவை ஏற்படும்போது மற்ற நாடுகளுக்கு உதவியாக இருக்கும் வகையில் அது அமைய வேண்டும். எஸ்.டி.ஜி.2030க்கான நமது உறுதிமொழிகளுக்கு உகந்த வகையில் நீடித்த பயன் தருவதாகவும், மனிதகுல நன்மைக்கானதாகவும் அவை இருக்க வேண்டும்'' என்று திரு. கோயல் கூறினார்.

 

தங்களுடைய சந்தைகளில் தாராள அனுமதி தரும் வகையிலும், கையிருப்பு வசதிகளை தொடர்ந்து, எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும் செயல்படுவது என்று ஜி 20 நாடுகளின் மற்றும் விருந்தினர் நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர்கள்  முடிவு செய்தனர். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கோவிட்-19 நோய்த் தொற்று உலகளாவிய சவால் என்றும், இதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனிதர்களின் வாழ்வைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் சர்வதேச சமுதாயம் பாடுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. பொருளாதார மீட்டுருவாக்கத்துக்கு வலுவான அடித்தளமிட வேண்டும் என்றும், நெருக்கடிக்குப் பிறகு நீடித்த, சமநிலையான, பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி முறையைக்கு அடித்தளமிட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

 

*****


(Release ID: 1609592) Visitor Counter : 273