வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இன்றியமையாத மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் 280 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்படுகின்றன
Posted On:
31 MAR 2020 10:40AM by PIB Chennai
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கடந்த ஆண்டுகளில் இந்திய ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தோராயமாக 18% பங்களிப்பை அவை வழங்கி உள்ளன. நடப்பு நிதியாண்டான 2019-20ல் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி ஏற்கனவே 110 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டிவிட்டது. கோவிட்-19 தொற்றை தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பொது முடக்கம் உள்ள இன்றைய சூழலில் மருந்துகள், மருந்துபொருட்கள் அல்லது மருத்துவ உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தயாரிப்பதில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் தடையேதும் ஏற்படக் கூடாது என்பதற்காக இவை செயல்படுகின்றன.
மருந்துபொருட்கள் மற்றும் மருத்துவமனை உபகரணங்கள் போன்ற இன்றியமையாத பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள 280க்கும் அதிகமான தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 1900க்கும் அதிகமான தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளன.
(Release ID: 1609477)