ரெயில்வே அமைச்சகம்

அத்தியாவசிய பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்து முழு வீச்சில் எடுத்துச் செல்கிறது இந்திய ரயில்வே

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 71261 பெட்டிகள் (வேகன்) சரக்கை இந்திய ரயில்வே கையாண்டுள்ளது - 48614 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 22647 இதர முக்கிய சரக்குகள்

Posted On: 30 MAR 2020 4:30PM by PIB Chennai

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பொது முடக்கத்தை சந்தித்து வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தங்கு தடையில்லாத சரக்கு சேவைகளின் மூலம் இந்திய ரயில்வே 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றுகிறது.

மொத்தம் 695 அடுக்குகள் 35942 பெட்டிகளில் 28 மார்ச் 2020 அன்று சரக்குகள் ஏற்றப்பட்டன.

இதில் 442 அடுக்குகள் 24412 பெட்டிகளில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் ஏற்றப்பட்டன. (ஒரு பெட்டியில் 58-லிருந்து 60 டன் சரக்குகள் வரை இருக்கும்). இதில் உணவு தானியங்கள் 54 அடுக்குகள் 2405 பெட்டிகளிலும் சர்க்கரை 3 அடுக்குகள் 126 பெட்டிகளிலும் உப்பு1 அடுக்கு 42 பெட்டிகளிலும் சமையல் எண்ணை 1 அடுக்கு 50 பெட்டிகளிலும் நிலக்கரி 356 அடுக்குகள் 20519 பெட்டிகளிலும் பெட்ரோலிய பொருட்கள் 27 அடுக்குகள் 1270 பெட்டிகளிலும் எடுத்துச்செல்ப்பட்டன.

29 மார்ச் 2020 அன்று, மொத்தம் 684 அடுக்குகள் 35319 பெட்டிகளில் சரக்குகள் ஏற்றப்பட்டன.

இதில் அத்தியாவசிய பொருட்கள் 437 அடுக்குகள் 24202 பெட்டிகளில் மட்டும் ஏற்றப்பட்டன. உணவு தானியங்கள் 40 அடுக்குகள் 1727 பெட்டிகளில், சர்க்கரை 5 அடுக்குகள் 210 பெட்டிகளில், உப்பு 1 அடுக்கு 42 பெட்டிகளில், சமையல் எண்ணை 1 அடுக்கு 42 பெட்டிகளில், நிலக்கரி 363 அடுக்குகள் 20904 பெட்டிகளிலும் பெட்ரோலிய பொருட்கள் 27 அடுக்குகள் 1277 பெட்டிகளிலும் எடுத்துச்செல்லப்பட்டன.

******


(Release ID: 1609330) Visitor Counter : 152