உள்துறை அமைச்சகம்
கொவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் தேசிய பொது முடக்கத்தின் போது, மக்களின் இன்னல்களைக் களைய மோடி அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது: மத்திய உள்துறை அமைச்சர்
பொது முடக்க நடவடிக்கைகளை சிறப்பாக அமல்படுத்துவதோடு, இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பொருளாதார சிக்கலைக் குறைக்கவும் மாநிலங்கள்/யூனியன் பிரேதசங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திரு. அமித் ஷா
Posted On:
29 MAR 2020 6:35PM by PIB Chennai
21 நாள் தேசிய பொது முடக்கத்தின் போது, மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஒட்டுமொத்தக் குறிக்கோளின் படி, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க, பொது முடக்க நடவடிக்கைகளை சிறப்பாக அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பொருளாதார சிக்கலை இந்த தருணத்தில் குறைக்கவும் மாநிலங்கள்/யூனியன் பிரேதச அரசுகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் படி, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக, அதிக அளவிலான இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுப்பதற்கு, அடிப்படை வசதிகளோடு கூடிய நிவாரண முகாம்களை அமைப்பதற்கும், அவர்களது பொருளாதார சிக்கல்களைக் களைவதற்கும் நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநிலங்கள்/யூனியன் பிரேதசங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
(Release ID: 1609134)
Visitor Counter : 223