பிரதமர் அலுவலகம்
இந்திய பிரதமர் பூட்டான் பிரதமருக்கு நன்றி
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2020 11:45PM by PIB Chennai
இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி, கொரானா வைரஸ் (COVID-19) அவசர கால நிவாரண நிதி திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய பூட்டான் பிரதமர் டாக்டர். லோட்டே ஷெரிங்கிற்கு நன்றி தெரிவித்தார்.
பூட்டான் அரசு சார்பில், கொரனா வைரஸ் நிவாரணத்திற்கான அவசர கால நிதி திட்டத்திற்கு பிரதமர் டாக்டர். லோட்டே ஷெரிங்க், $100,000 (ஒரு லட்சம் டாலர்) நிதி அளித்தமைக்காக தனது நன்றியை தெரிவித்தார். தெற்காசிய மண்டல ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு நாடுகளின் (சார்க்) தலைவர்கள் கொரானா வைரஸ்க்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் முயற்சிகளை எடுப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இந்திய பிரதமர் தெரிவித்தார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1609124)
வருகையாளர் எண்ணிக்கை : 171