ரெயில்வே அமைச்சகம்
முடக்கநிலை காலத்தில் உதவி தேவைப்படுவோருக்கு சமைத்த உணவுகளை வழங்கும் பணியை இந்திய ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது
13 ஐ.ஆர்.சிடி.சி. உணவு தயாரிப்பு வசதி உள்ள இடங்கள் உணவு விநியோகத்துக்கான முன்னோடி மையங்களாக மாறவுள்ளன
இன்றைக்கு (2020 மார்ச் 29 ) நாடு முழுக்க உதவி தேவைப்படுவோருக்கு மொத்தம் 11030 மதிய உணவுகளை ஐஆர்சிடிசி வழங்கியது
அந்தந்த மண்டலங்கள், கோட்டங்களின் மூத்த ரயில்வே அதிகாரிகள் உரிய வசதிகளை அளிப்பார்கள்
Posted On:
29 MAR 2020 5:05PM by PIB Chennai
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி சமையல் வசதி உள்ள பகுதிகளில், உதவி தேவைப்படும் நிலையில் இருப்போருக்கு சமைத்த உணவுகள் மற்றும் காகிதத் தட்டுகளை மொத்தமாக அளிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது
மண்டலம் வாரியாக ஐஆர்சிடிசி சமையல் வசதி உள்ள இடங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:
- தெற்கு மத்திய ரயில்வே : விஜயவாடா
- மேற்கு ரயில்வே: ஆமதாபாத், மும்பை சென்ட்ரல்
- ஈஸ்ட்கோஸ்ட் ரயில்வே: குர்தா சாலை
- தென் கிழக்கு ரயில்வே: பாலசோர்
- வடக்கு ரயில்வே: புதுடெல்லி, பார்காஞ்ச்
- வடக்கு மத்திய ரயில்வே: பிரயாக்ராஜ், ஜான்சி, கான்பூர்
- மத்திய ரயில்வே: சிஎஸ்எம்டி, புனே, ஷோலாப்பூர், பூசாவால்
- மேற்கு மத்திய ரயில்வே: இட்டார்சி
- தென் மேற்கு ரயில்வே: பெங்களூர், ஹூப்பளி
- தெற்கு ரயில்வே: திருவனந்தபுரம், செங்கல்பட்டு, காட்பாடி, மங்களூர்
- கிழக்கு ரயில்வே: சியல்டாஹ், ஹௌரா
- கிழக்கு மத்திய ரயில்வே: ராஜேந்திர நகர்
- வடக்கு பிராண்டியர் ரயில்வே: கட்டிஹர்
இன்றைக்கு அதாவது 29 மார்ச் 2020 நாளில், உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள், குடிபெயர்ந்து சென்ற தொழிலாளர்கள், சில முதியோர் இல்லங்கள் மற்றும் நாடெங்கும் உள்ள மற்றவர்களுக்கு மொத்தம் 11030 மதிய உணவுகளை ஐஆர்சிடிசி வழங்கியது.
(Release ID: 1609110)
Visitor Counter : 157