சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய தொலை ஆலோசனை மையத்தை தொடங்கினார் டாக்டர். ஹர்ஷவர்தன்

प्रविष्टि तिथि: 28 MAR 2020 7:53PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்தன் இன்று தேசிய தொலை ஆலோசனை மையத்தை தொடங்கினார். நாட்டில் உள்ள எய்ம்ஸ் நிறுவனங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் பிரத்யேக அதிகாரிகளுடன் கொவிட் 19-க்கு எதிரான முனேற்பாடுகள் குறித்து கலந்துரையாடி, அவ்ர் ஆய்வு மேற்கொண்டார்.

கொன்டெக் (CoNTeC)  திட்டம் என்பது கொவிட்-19 தேசியத் தொலை ஆலோசனை மையம் என்பதன் சுருக்கமாகும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கருத்தில் உதித்த கொன்டெக் திட்டத்தை புதுதில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் செயல்படுத்துகிறது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.ஹர்ஷவர்தன், கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் சிரமங்கள் தொடர்பாக, நாடு முழுவதும்  உள்ள மருத்துவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையுடன் தொடர்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, கொன்டெக் திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனையில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 24 மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தில் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று  அவர் மேலும் தெரிவித்தார். இதில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்குவதற்கு  இடமும், உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. எய்ம்சில் இந்த மையத்தை அமைத்திருப்பதன் மூலம், சிறிய மாநிலங்களில் உள்ள மருத்துவர்களும்,  நீண்ட அனுபவம் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் உதவியைப் பெற முடியும் என்று அவர் கூறினார். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் கொவிட் -19க்கு பல்வேறு முறைகளைக் கையாண்டு சிகிச்சை அளித்து வருவதாக அவர் கூறினார். நம்நாட்டு மருத்துவர்கள் குறைந்தபட்சம், இந்த மையத்தைத் தொடர்பு கொண்டு, தங்களுக்குள் கலந்தாலோசித்து, இந்த நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.   


(रिलीज़ आईडी: 1609022) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Assamese , Odia , Telugu