பிரதமர் அலுவலகம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2020 9:03PM by PIB Chennai

ஜோத்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது  வேதனையைத் தெரிவித்துள்ளார்.     “ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நிகழ்ந்த  பயங்கர சாலை விபத்து குறித்து அறிந்து நான் மிகவும் கவலையுற்றேன்” என்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1606461) வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Odia