மத்திய அமைச்சரவை

பைசாக் நிறுவனத்தை மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ், இயங்கும் நிறுவனமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 FEB 2020 4:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தில் உள்ள பாஸ்கராச்சாரியா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியல் நிறுவனத்தை (பைசாக்), மத்திய அரசின்  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்குவதற்கும் பாஸ்கராச்சாரியா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியல் தேசிய நிறுவனம் (பைசாக் என்) என தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளது. 

பயன்கள்

  1. சேவைகளில் புதுமை மற்றும்  ஆற்றலைப் பராமரிக்க, பைசாக்கில் தற்போது பணிபுரியும் திறன்மிகு பணியாளர்களை, தேசிய அளவிலான நிறுவனங்களில் சேர வழிவகை செய்தல்.
  2. விரிவான நடவடிக்கை வாய்ப்புகளை செயல்படுத்த வகை செய்தல்.
  3. புவியியல் தகவல் அமைப்புத் திட்டங்களை திறமையுடன் செயல்படுத்தவும், விரிவான நடவடிக்கை வாய்ப்புகளை அமல்படுத்தவும் வகை செய்தல்.
  4. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு உதவவும் விரிவான நடவடிக்கை வாய்ப்புகளை அமல்படுத்தவும் வகை செய்தல்.
  5. வெளிசார்ந்த முடிவுகளுக்கான ஆதார முறைகள் மூலம் மேம்பாட்டு திட்டமிடுதல் மற்றும் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்துதல்.

****************


(Release ID: 1603676) Visitor Counter : 172