பிரதமர் அலுவலகம்
ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
13 FEB 2020 2:00PM by PIB Chennai
ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் இன்று நிகழ்ந்த ஒரு விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது குறித்து நான் ஆழ்ந்த துயருற்றேன். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பகிர்ந்துள்ள டுவிட்டில் கூறியுள்ளார்.
“விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
****
(रिलीज़ आईडी: 1603220)
आगंतुक पटल : 172