பிரதமர் அலுவலகம்

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய குடிமக்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

Posted On: 06 FEB 2020 3:47PM by PIB Chennai

குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (06.02.2020) பதிலளித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விரிவாக விளக்கமளித்த பிரதமர், இந்த திருத்தச் சட்டத்தால் இந்திய குடிமக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அவைக்கு உறுதி அளித்தார்.

முந்தைய அரசுகளின் நிலைப்பாடும் இக்கருத்தையொட்டியே இருந்ததாகவும் தமது உரையில் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து அகதிகளாக வருவோருக்கு இந்தியா ஆதரவளிப்பதை உறுதி செய்ய ஏதுவாக, தேவைப்பட்டால் இந்தச் சட்டத்தை திருத்துவதை நாட்டின் முதலாவது பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவும் ஆதரித்ததாக திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார். 

இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமென்ற பாகிஸ்தானின் செயல் திட்டத்தை வலியுறுத்தும் வகையில் சில அரசியல் கட்சிகள் செயல்படுவதாக குறிப்பிட்ட பிரதமர், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய குடிமக்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மக்களவைக்கு உறுதி அளித்தார்.

“இந்திய குடிமக்கள், அவர்கள் எந்த மதம்/இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குடியுரிமை திருத்தச் சட்டம் செயல்படுத்தப்படுவதால் அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

PM @narendramodi: இந்திய மக்களால் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டவர்கள், தற்போது நினைத்துப் பார்க்கக் கூட முடியாதவற்றை செய்து கொண்டுள்ளனர். அத்தகையோர், நமது குடிமக்களை அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே பார்க்கின்றனர்.

நாங்கள் மாறுபட்டவர்கள். ஒவ்வொருவரையும் இந்தியராகவே நாங்கள் பார்க்கிறோம்.

 

@PMOIndia

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஏராளமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, இந்தியா பல துண்டுகளாக சிதறுண்டு போக வேண்டுமென்று விரும்புவோருடன் சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவது துரதிருஷ்டவசமானது: PM @narendramodi

 

******

 


(Release ID: 1602271) Visitor Counter : 295