சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதிய கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக் கூட்டத்தை அமைச்சரவை செயலாளர் நடத்தினார்


புதிய பயண அறிவுரை வழங்கப்பட்டுள்ளது: பயணிகள் சீனாவுக்குப் பயணம் செய்வதை தவிர்க்கவும்; சீனாவிலிருந்து திரும்பிவரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

Posted On: 03 FEB 2020 4:27AM by PIB Chennai

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை, விமானப் போக்குவரத்து, சுகாதார ஆராய்ச்சி ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் இந்திய – திபெத் எல்லைக் காவல்படை, ராணுவ மருத்துவ சேவைகள், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் புதிய கொரோனா வைரஸ் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை அமைச்சரவை செயலாளர் இன்று நடத்தினார். இதுவரை அமைச்சரவை செயலாளர் ஆறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

 

சீனாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வலியுறுத்தி புதிய பயண அறிவுரை வழங்கப்பட்டுள்ளது; சீனாவிலிருந்து திரும்பும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 2020 ஜனவரி 15-ஆம் தேதிமுதல் சீனாவுக்குப் பயணம் செய்தவர்களும், அண்மையில் பயணம் செய்தவர்களும் கூட தனிமைப்படுத்தப்படுவார்கள்.

 

தற்போது வரை 445 விமானங்களில் பயணம் செய்து வந்த 58 ஆயிரத்து 658 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 142 பயணிகளுக்கு ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்மூலம் நோய் அறிகுறிகள் சோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தும் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 130 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, 128-ல் நோய்த் தொற்று இல்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது.  கேரளாவில் இரண்டு பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.

 

இரண்டாவது கட்டமாக (7 மாலத்தீவு குடிமக்கள் உட்பட) 330 பயணிகள் வூஹானிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளனர்.  இவர்களில் (7 மாலத்தீவு குடிமக்கள் உட்பட) 300 பயணிகள் இந்தியா – திபெத் எல்லை காவல்படையின் சாவ்லா முகாமிலும், மற்ற 30 பேர் மனேசாரிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

                          

****



(Release ID: 1601678) Visitor Counter : 193