பிரதமர் அலுவலகம்

கொல்கத்தாவில், கொல்கத்தா துறைமுக சபையின் 150 ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு; ரவீந்திர சேது ஒளி-ஒலிக் காட்சியையும் தொடங்கி வைத்தார்

Posted On: 11 JAN 2020 9:23PM by PIB Chennai

கொல்கத்தாவில் இன்று (11.01.2020), கொல்கத்தா துறைமுக சபையின் 150-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில், கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர சேது (ஹவுரா பாலம்) பற்றிய ஒளி & ஒலிக் காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.  முகப்பு விளக்குகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், அங்கு நடைபெற்ற வண்ணமிகு கலாச்சார நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். 

 

மேற்கு வங்க ஆளுநர் திரு ஜெகதீப் தங்கர், முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

 

ரவீந்திர சேதுவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலங்கார விளக்குகளில், மின்சார சிக்கனத்திற்கு ஏற்ற 650 எல்ஈடி மற்றும் ஒளிபாய்ச்சும் விளக்குகள், இசைக்கு ஏற்ப காட்சிகளை விளக்கும் பல வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.  இந்த வண்ண விளக்குகள், பொறியியல் அதிசயமாக கருதப்படும் அந்த பாலத்திற்கு இன்னும் அதிக பாரம்பரிய தோற்றத்தை ஏற்படுத்தும்.  இந்த புதிய ஒளி-ஒலிக் காட்சி, சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் பெருமளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ரவீந்திர சேது 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்த ரவீந்திர சேதுவின் 75-ஆவது ஆண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.  இந்த பாலம் நட்டுகள், போல்ட் ஏதுமின்றி, ஒட்டுமொத்த பாலமும் குடையாணி முறையில் அமைக்கப்பட்டுள்ளதால், இது பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது.   இந்தப் பாலம், 26,500 டன் எஃகு இரும்பால் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் 23,000 டன் உயர் இழுவிசை கலப்பு எஃகு இரும்பாகும். 

 

**************


(Release ID: 1599224) Visitor Counter : 200