மத்திய அமைச்சரவை

அமைதி மற்றும் மக்கள் நோக்கங்களுக்காக விண்வெளி ஆய்விலும், பயன்பாட்டிலும் ஒத்துழைப்பது குறித்த இந்தியா - மங்கோலியா இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 JAN 2020 3:21PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைதி மற்றும் மக்கள் நோக்கங்களுக்காக விண்வெளி ஆய்விலும், பயன்பாட்டிலும் ஒத்துழைப்பது குறித்த இந்தியா - மங்கோலியா இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மங்கோலியா அதிபரின் இந்தியப் பயணத்தின்போது, 2019 செப்டம்பர் 20 அன்று புதுதில்லியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், புவியின் தொலை உணர்வு உள்ளிட்ட  பயன்பாடுகள், செயற்கைக் கோள்வழி தகவல் தொடர்பு, விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் ஆய்வு போன்றவற்றில் ஒத்துழைக்க  இந்த ஒப்பந்தத்தில் வகை  செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரோ / அறிவியல் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் மங்கோலியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுப்பணிக்குழு அமைப்பதற்கு ஒப்பந்தம் வழி வகுத்துள்ளது.

இந்த ஒப்பந்த அடிப்படையில் கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செலவுகளைப் பொறுத்தவரை நிதிநிலைமையைப் பொறுத்து பங்கேற்பாளர்கள் கூட்டாக முடிவு செய்வார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன் மனிதகுலம் முழுமைக்கும் கிடைப்பதோடு இந்தியாவின் அனைத்துப் பகுதியினரும், பிரிவினரும் பயனடைவார்கள்.

இதன் மூலம் புதிய ஆய்வு நடவடிக்கைகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும்.

------



(Release ID: 1598788) Visitor Counter : 166