பிரதமர் அலுவலகம்
இந்திய முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜென்ரல் பிபின் ராவத்துக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
Posted On:
01 JAN 2020 2:30PM by PIB Chennai
இந்திய முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜென்ரல் பிபின் ராவத்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“புதிய ஆண்டினையும், புதிய பத்தாண்டினையும் நாம் தொடங்கும் வேளையில் ஜென்ரல் பிபின் ராவத்தை, இந்தியா தனது முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாகப் பெறுவதற்கு நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். அவரது மிகச்சிறந்த பொறுப்புக்காக அவரை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அவர் பேரார்வத்துடன் இந்தியாவுக்குப் பணியாற்றிய மிகச்சிறந்த அதிகாரி ஆவார்.
முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதி பொறுப்பேற்கும் தருணத்தில், நமது நாட்டுக்காகப் பணிபுரிந்து, தங்களின் இன்னுயிர் ஈந்த வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். கார்கிலில் போரிட்ட துணிச்சல் மிக்க வீரர்களை நான் நினைவு கூர்கிறேன். இந்தப் போருக்குப் பிறகுதான் நமது ராணுவத்தை சீரமைப்பதற்கான விவாதங்கள் தொடங்கின. இதுவே, தற்போதைய வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்துக்கு வழிவகுத்தது.
2019 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமைத் தளபதியை இந்தியா பெறும் என்று நான் அறிவித்தேன். இந்தக் கட்டமைப்பு நமது முப்படைகளை நவீனப்படுத்தும் அளப்பரியப் பொறுப்பை கொண்டுள்ளது. மேலும், 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் கூட இது பிரதிபலிக்கும்.
ராணுவ நிபுணத்துவம் மற்றும் நிறுவனமாக்கும் தேவையுடன் முப்படைகளின் தலைமை தளபதி பதவியோடு ராணுவ விவகாரங்கள் துறை உருவாக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான விரிவான சீர்திருத்தமாகும். இது, மாறிவரும் நவீன போர்முறை சவால்களை எதிர்கொள்ள நமது நாட்டிற்கு உதவியாக இருக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
@narendramodi
புதிய ஆண்டினையும், புதிய பத்தாண்டினையும் நாம் தொடங்கும் வேளையில் ஜென்ரல் பிபின் ராவத்தை, இந்தியா தனது முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாகப் பெறுவதற்கு நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். அவரது மிகச்சிறந்த பொறுப்புக்காக அவரை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அவர் பேரார்வத்துடன் இந்தியாவுக்குப் பணியாற்றிய மிகச்சிறந்த அதிகாரி ஆவார்
|
@narendramodi
முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதி பொறுப்பேற்கும் தருணத்தில், நமது நாட்டுக்காகப் பணிபுரிந்து, தங்களின் இன்னுயிர் ஈந்த வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். கார்கிலில் போரிட்ட துணிச்சல் மிக்க வீரர்களை நான் நினைவு கூர்கிறேன். இந்தப் போருக்குப் பிறகுதான் நமது ராணுவத்தை சீரமைப்பதற்கான விவாதங்கள் தொடங்கின. இதுவே, தற்போதைய வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்துக்கு வழிவகுத்தது
|
@narendramodi
2019 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமைத் தளபதியை இந்தியா பெறும் என்று நான் அறிவித்தேன். இந்தக் கட்டமைப்பு நமது முப்படைகளை நவீனப்படுத்தும் அளப்பரியப் பொறுப்பை கொண்டுள்ளது. மேலும், 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் கூட இது பிரதிபலிக்கும்
|
@narendramodi
ராணுவ நிபுணத்துவம் மற்றும் நிறுவனமாக்கும் தேவையுடன் முப்படைகளின் தலைமை தளபதி பதவியோடு ராணுவ விவகாரங்கள் துறை உருவாக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான விரிவான சீர்திருத்தமாகும். இது, மாறிவரும் நவீன போர்முறை சவால்களை எதிர்கொள்ள நமது நாட்டிற்கு உதவியாக இருக்கும்
|
******
(Release ID: 1598184)
Visitor Counter : 287