மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இப்போது இந்தியாவில் வசிப்பவர்களில் 125 கோடிப் பேருக்கு ஆதார் உள்ளது


2019-ஆம் ஆண்டு இறுதியில் ஆதார் அட்டை பெற்ற மக்கள் எண்ணிக்கை 125 கோடியை மிஞ்சியது

Posted On: 27 DEC 2019 11:31AM by PIB Chennai

இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் தி்ட்டத்தில் புதிய எல்லையை அடைந்திருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, ஆதார் அட்டை வழங்கப்பட்ட எண்ணிக்கை 125 கோடியை மிஞ்சியுள்ளது. இதனையடுத்து, 125 கோடிக்கும் கூடுதலான இந்தியவாழ் மக்கள் 12 இலக்க தனித்துவ அடையாளமான ஆதாரைப் பெற்றுள்ளனர்.

     மக்கள், ஆதாரை அடிப்படை அடையாள ஆவணமாக பயன்படுத்துவது விரைவாக வளர்ந்து வரும் நிலையில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆதார் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, ஆதாரை அடிப்படையாகக் கொண்ட அடையாளப்படுத்தும் பணிகள், சுமார் 37 ஆயிரம் கோடி வரை நடைபெற்றுள்ளது. உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு 3 கோடி அடையாளப்படுத்தும் கோரிக்கைகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு வருகின்றன.

     ஆதாரில் தங்களைப் பற்றிய புதிய விவரங்களை இணைத்து, மேம்படுத்தி வரும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தவகையில், இதுவரை 331 கோடி புதுப்பிப்பு விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, நாளொன்றுக்கு இத்தகைய பதிவுகள் 3 முதல் 4 லட்சம் வரை பெறப்படுகின்றன.

 

******


(Release ID: 1597782)