பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

சட்டத்தை மதித்து செயல்படும் நிறுவனங்கள் தொழில் நடத்துவதை எளிதாக்க பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது


திவால் & நொடித்துப் போதல் கட்டமைப்பு உருவாக்கம்

Posted On: 15 DEC 2019 11:21AM by PIB Chennai

தொழில் துறை சார்ந்த அனைத்துத் தரப்பினருக்கும், தொழில் நடத்துவதை எளிதாக்கி வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை, கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முன்முயற்சிகள் / முடிவுகளை மேற்கொண்டுள்ளது. 

  • திவால் பிரச்சினைக்கு தீர்வு காணும் நாடுகளின் பட்டியலில் 2018-ஆம் ஆண்டில் 108 ஆவது இடத்திலிருந்த இந்தியா 56 இடங்கள் முன்னேறி, 2019-ல் 52 ஆவது இடத்திற்கு வந்துள்ளது. 
  • மீட்கப்படும் தொகையின் அளவு 2018-ல் 26.5% ஆக இருந்த நிலையில், 2019-ல் 71.6% ஆக அதிகரித்துள்ளது. 
  • CIN, PAN, TIN, DIN, Name, EPFO, ESIC and GSTN போன்ற எட்டு சேவைகள் 3 அமைச்சகங்கள் மூலம், ஒரே படிவத்தின் வாயிலாக, எளிமைப்படுத்தப்பட்ட மின்னணு முறையில்  வழங்கப்படுகின்றன. 
  • கம்பெனிகள் சட்டத்தின்கீழ் நடைபெறும் தொழில்நுட்ப & நடைமுறை மீறல்கள் குற்றமற்ற செயலாக மாற்றப்பட்டுள்ளது. 
  • நிறுவனங்களின் பெயர் பதிவு மற்றும் இயக்குநர் அடையாள எண் வழங்கும் நடைமுறைகளுக்காக “RUN – Reserve Unique Name” என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • கம்பெனிகளை இணைத்தல் & கையகப்படுத்துதல் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த ஏதுவாக போட்டிச்சட்டம் 2002-லிருந்து விலக்கு அளிப்பது திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
  • தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு கம்பெனி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு வகைப்பட்ட வாக்குரிமைகளுடன் பங்கு வெளியிடுதல் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
  • முதலீட்டாளர்கள், பொதுப்பங்குகளை வாங்க விண்ணப்பித்த 3 நாட்களில் அதனை பெறும் வகையில் செபி நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. 
  • பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களின் பங்குகளை நீக்குதல்.
  • கம்பெனிகள் (அபராதம்) விதிமுறைகள் திருத்தப்பட்டன, இந்த நடவடிக்கைகளை வெளிப்படையானதாகவும், பாரபட்சமற்றதாகவும் ஆக்கியுள்ளது.
  • பொறுப்பான வர்த்தக நடைமுறைகளுக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
  • தேசிய பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு விருதுகள் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளன. 

திவால் & நொடித்துப் போதல் கட்டமைப்பு:

  • திவால் & நொடித்துப் போதல் சட்ட (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 16.8.2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • திவால் & நொடித்துப் போதல் சட்ட (2-வது திருத்த) மசோதா 12 டிசம்பர் 2019 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • இந்த திருத்த சட்டத்தின்கீழ் 21,136 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • 9,653 வழக்குகள் அனுமதிக்கு முந்தைய நிலையிலேயே  தீர்வு காணப்பட்டு, ரூ.3,74,931.30 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

**********


(Release ID: 1596768) Visitor Counter : 298