மத்திய அமைச்சரவை

நிலுவையில் இருக்கும் நடுத்தர வருவாய்ப் பிரிவு வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கான சிறப்பு சாளரத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 NOV 2019 8:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நடுத்தர வருவாய்ப் பிரிவில் வீட்டுவசதித் திட்டங்கள் முடிக்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு, அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி  வழங்குவதற்காக ‘சிறப்புச் சாளரம்’ ஒன்றை உருவாக்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

 

மத்திய அரசு இந்தத் திட்டங்களுக்கான நிதியை வழங்கும் வகையில் செயல்படும். அரசு வழங்கும் மொத்த தொகை ரூ.10,000 கோடியாக இருக்கும். 

 

மாற்று முதலீட்டு நிதி பிரிவு-2-ன் கீழ்  நிதியம் அமைக்கப்பட்டு, இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கும்.

 

இந்த வகையில் சிறப்பு சாளரத்தின் கீழ்,  முதல் மாற்று முதலீட்டு நிதிக்கு எஸ்பிஐகேப் என்னும் நிறுவனம் முதலீட்டு மேலாளராக செயல்படும்.

 

போதுமான நிதி  இல்லாத காரணத்தால் முடிக்க முடியாமல் பாதியில் நிற்கும் திட்டங்களுக்கு நிவாரணம் வழங்கி அவற்றை நிறைவு செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.  இதன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு வீடுகள் உறுதி செய்யப்படும்.

மனை மற்றும் வீட்டு வணிகத் தொழிலில் பல்வேறு இதர தொழில்களுடன் தொடர்பு கொண்ட தொழிலாக இருப்பதால்,  இந்தத் துறையின் வளர்ச்சி, இதர முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள தேக்கத்தைப் போக்க நேர்மறையான பயனாக இருக்கும்.  இதன்மூலம் இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். 

**************


(Release ID: 1590769) Visitor Counter : 181