பிரதமர் அலுவலகம்

காற்றுமாசு நிலைமையை மத்திய அமைச்சரவை செயலாளர் ஆய்வு செய்தார்

Posted On: 05 NOV 2019 7:58PM by PIB Chennai

தேசியத் தலைநகர் பகுதியில் காற்றுமாசினைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் இன்று ஆய்வு செய்தார்.

பஞ்சாப், ஹரியானாவில் பயிர்களின் அடிப்பகுதிகள் எரிக்கப்படுவது தொடர்கிறது என்பதும், இதன்மீது கூடுதல் கவனத்துடன் நடவடிக்கை தேவைப்படுகிறது என்பதும் இதில் கண்டறியப்பட்டது.

விதிமுறைகளை மீறுவோருக்குப் பொருத்தமான அபராதங்கள் விதிப்பதை உறுதி செய்ய கூடுதலாகக் கண்காணிப்புக் குழுக்களைப் பணியமர்த்த வேண்டும் என்று இந்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகரில் உள்ள பல்வேறு ஒருங்கிணைப்பு முகமைகளின் நிலை பற்றியும் விவாதிக்கப்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர விரிவான முயற்சிகள் தேவை என்பதும் உணரப்பட்டது.

எதிர்காலத்தில் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கு முழுமையான தயாரிப்பை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

*****



(Release ID: 1590559) Visitor Counter : 101