பிரதமர் அலுவலகம்

அதிகாரிகளின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் படிநிலைகளைக் களைய பிரதமர் அழைப்பு


கெவாடியாவில் நடைபெற்ற ஆரம்ப் மாநாட்டில் 94-வது தொகுதி குடிமைப்பணி பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

Posted On: 31 OCT 2019 3:07PM by PIB Chennai

குஜராத்தின் கெவாடியாவில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையும், முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் பயிற்சி மையமும் இணைந்து ஏற்பாடு செய்த அடிப்படை வகுப்பில் பங்கேற்ற 94-வது குடிமைப்பணி தொகுப்பைச் சேர்ந்த 430 பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

 

முதன் முறையாக அளிக்கப்படும் ஒருவாரகால விரிவான தனித்துவ அடிப்படைப் பயிற்சியான  ஆரம்ப் (தொடக்கம்) குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. நேரடிக் கலந்துரையாடலின் போது, வேளாண்மை மற்றும் ஊரக அதிகாரமளித்தல், சுகாதார சேவை சீர்திருத்தம் மற்றும் கொள்கை வகுத்தல்; நீடித்த ஊரக மேலாண்மை தொழில்நுட்பம், உள்ளார்ந்த நகரமயமாக்கல் மற்றும் கல்வியின் எதிர்காலம் ஆகிய ஐந்து அம்சங்கள் குறித்து பயிற்சி அதிகாரிகள் செயல்விளக்கம்  அளித்தனர்.

 

உலக வங்கித்தலைவர் திரு டேவிட் மால்பாஸ்,  பிரதமரின் முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சரவை செயலாளர், எதிர்காலப் பயிற்சி நிறுவனம் மற்றும் பன்முகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் அளித்த பயிற்சிகளின் சாரம்சம் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது பேசிய பிரதமர், இந்திய குடிமைப்பணிகளின் நிறுவனத் தந்தையாக போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதியன்று, இது போன்ற பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது என்றார்.

 

இந்திய குடிமைப்பணி சர்தார் படேலுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. ஒற்றுமைக்கான சிலை உள்ள  கெவாடியாவிலிருந்து நாம் அனைவரும் ஊக்கத்தையும், நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற வலிமையையும் பெறமுடிகிறது.  இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

 

ஆரம்ப் அறக்கட்டளை, எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான அமைப்பு என்றும், நிர்வாகத்தில் முன் உதாரணமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு வாய்ப்புகளை அது கொண்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

 

“இந்த ஆரம்ப் படிப்பு நாட்டையும், எதிர்காலத்தையும் மையமாகக் கொண்டது. நிர்வாகத்தில் முன் உதாரணமான மாற்றத்தை இது கொண்டுவரும்.  அங்கு குறைபாடுகளுக்கு இடமில்லை, மாறாக மக்கள் விரிவான அடிப்படையில் இணைந்து பாடுபடுவார்கள்”.

 

பயிற்சி பெறுபவர்கள் அவர்கள் பார்க்கும் விதத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவார்கள் என்று குறிப்பிட்ட அவர்,  சில சமயங்களில், சொல்லியலில் ஏற்படும் மாற்றம் நோக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று  கூறினார்.

“நாம் பொருட்களை எப்படி பார்க்கிறோம் என்பதை மாற்ற வேண்டும். இதற்கு மாற்றப்பட்ட சொல்லியலும் சில சமயம் உதவும்.  முன்பு, மக்கள் பின்தங்கிய மாவட்டங்களைப் பற்றி சொல்லி வந்தார்கள். தற்போது நாம் அதனை விருப்பம் உள்ள மாவட்டங்கள் என்று கூறுகிறோம். எந்தப் பணியிடத்தையும் ஏன் தண்டனையாக பார்க்க வேண்டும்? அதை ஏன் வாய்ப்புள்ள பணியாகப் பார்க்கக் கூடாது”:பிரதமர்

 

பயிற்சி பெறும் அதிகாரிகள் மற்றும் அவர்களது புதிய எண்ணங்கள் மூலம் காட்டும் ஈடுபாட்டைப் பாராட்டிய பிரதமர், இந்தத் தனித்துவமான பயிற்சி வகுப்பு அளிக்கும் வாய்ப்புகள், மற்றும் தொழில்நுட்பங்கள், கொள்கை வகுத்தல் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்ட அவர்களது வாழ்க்கைத் தொழிலை முன்நடத்திச் செல்ல பெரிதும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

அதிகாரிகளின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் படிநிலைகளைக் களைய வேண்டும் என்று அவர் கூறினார். “குறைபாடுகளும். படிநிலைகளும் இருப்பது நமது நிர்வாக நடைமுறைக்கு உதவாது. நாம் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் நாட்டு நலனுக்காக சேர்ந்து பாடுபடவேண்டும்”.

 

குறைபாடுகளும். படிநிலைகளும் இருப்பது நமது நிர்வாக நடைமுறைக்கு உதவாது

நாம் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் நாட்டு நலனுக்காக சேர்ந்து பாடுபடவேண்டும் : பிரதமர்

PM @narendramodi  — PMO India (@PMOIndia) October 31, 2019

 

நாம் பொருட்களை எப்படி பார்க்கிறோம் என்பதை மாற்ற வேண்டும். இதற்கு மாற்றப்பட்ட சொல்லியலும் சில சமயம் உதவும்.  முன்பு, மக்கள் பின்தங்கிய மாவட்டங்களைப் பற்றி சொல்லி வந்தார்கள். தற்போது நாம் அதனை விருப்பம் உள்ள மாவட்டங்கள் என்று கூறுகிறோம்.

எந்தப் பணியிடத்தையும் ஏன் தண்டனையாக பார்க்க வேண்டும்? அதை ஏன் வாய்ப்புள்ள பணியாகப் பார்க்கக் கூடாது :பிரதமர்

— PMO India (@PMOIndia) October 31, 2019

 

 

 

 

இந்த ஆரம்ப் படிப்பு நாட்டையும், எதிர்காலத்தையும் மையமாகக் கொண்டது.

நிர்வாகத்தில் முன் உதாரணமான மாற்றத்தை இது கொண்டுவரும்.  அங்கு குறைபாடுகளுக்கு இடமில்லை, மாறாக மக்கள் விரிவான அடிப்படையில் இணைந்து பாடுபடுவார்கள் : பிரதமர்

PM @narendramodi pic.twitter.com/GesQ8S4WsW

— PMO India (@PMOIndia) October 31, 2019

 

 

இந்திய குடிமைப்பணி சர்தார் படேலுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

ஒற்றுமைக்கான சிலை உள்ள  கெவாடியாவிலிருந்து நாம் அனைவரும் ஊக்கத்தையும், நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற வலிமையையும் காணமுடிகிறது.

இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்: பிரதமர்

PM @narendramodi pic.twitter.com/SrXs3lss8o

— PMO India (@PMOIndia) October 31, 2019



(Release ID: 1589934) Visitor Counter : 161