பிரதமர் அலுவலகம்

மிக வறுமையானவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதே எனது குறிக்கோள்: பிரதமர்


இந்தியாவில் நாங்கள் எதை செய்தாலும் அது உலகளவிலான முன்முயற்சியாகவும் இருக்கும்: பிரதமர்

ரியாத் எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பு கூட்டத்தில் பிரதமர் முக்கிய உரையாற்றினார்

Posted On: 29 OCT 2019 10:24PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பு கூட்டத்தில் முக்கிய உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மிகவும் வறுமையில் இருப்பவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி, கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதே தமது குறிக்கோள் என்றார். “உலக நன்மைக்காக இந்தியா எவ்வாறு பங்களிக்க முடியும் என்று நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன்” என்று அவர் கூறினார்.

இந்தியாவில் நாங்கள் எதை செய்தாலும் அது உலகளவிலான முன்முயற்சியாகவும் இருக்கும் என்று அவர் கூறினார். உதாரணத்திற்கு, உலகளவில் காசநோய்க்கு முடிவு கட்ட நிர்ணயிக்கப்பட்ட 2030-க்கு முன்னரே 2025-ல் காசநோய்க்கு முடிவு கட்டுவோம் என்ற எங்களது குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியா வெற்றி பெறும் போது உலகம் ஆரோக்கியமிக்க இடமாக இருக்கும்.

 

PMO India (@PMOIndia)

மிகவும் வறுமையில் இருப்பவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதே எனது குறிக்கோள்.

உலக நன்மைக்காக இந்தியா எவ்வாறு பங்களிக்க முடியும் என்று நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன்.

இந்தியாவில் நாங்கள் எதை செய்தாலும் அது உலகளவிலான முன்முயற்சியாகவும் இருக்கும்.

உதாரணத்திற்கு, உலகளவில் காசநோய்க்கு முடிவு கட்ட நிர்ணயிக்கப்பட்ட 2030-க்கு முன்னரே 2025-ல் காசநோய்க்கு முடிவு கட்டுவோம் என்ற எங்களது குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்தியா வெற்றி பெறும் போது உலகம் ஆரோக்கியமிக்க இடமாக இருக்கும்: பிரதமர்.

*******


(Release ID: 1589548) Visitor Counter : 166