பிரதமர் அலுவலகம்
2018 ஆம் ஆண்டின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் பிரதமரை சந்தித்தனர்
प्रविष्टि तिथि:
09 OCT 2019 6:36PM by PIB Chennai
2018 ஆம் ஆண்டின் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்தனர்.
அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், தேசத்தின் சிறப்புக்காக அயராது, அர்ப்பணிப்போடு பாடுபட வேண்டுமென்று இளம் அதிகாரிகளை ஊக்கப்படுத்தினார்.

அன்றாடப் பணியில் தங்களின் சேவை மனப்பான்மையையும், அர்ப்பணிப்பையும் பதிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரிகளைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். காவல் படையினரைப் பற்றிய மக்களின் கருத்து என்ன என்பதை ஒவ்வொரு அதிகாரியும் உணர வேண்டுமென்றும், காவல் துறையினர் மக்களுக்கு நண்பர்களாகவும், எளிதில் அணுகக் கூடியவர்களாகவும் இருக்கும் வகையில் பணியாற்ற வேண்டுமென்றும் அவர் கூறினார்.
குற்றத் தடுப்பில் காவல் துறையினரின் கவனம் இருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார். நவீன காவல் படையை உருவாக்குவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் அவர் விவரித்தார்.
சமூக மாற்றத்திலும் முன்னேற விரும்பும் மாவட்டங்களை மாற்றியமைப்பதிலும் காவல் துறையின் பங்கு பற்றி அவர்களுடன் பிரதமர் விவாதித்தார். 2018 பிரிவின் பயிற்சி அதிகாரிகளில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் இருப்பதற்குப் பாராட்டு தெரிவித்தார். தேசத்தின் கட்டமைப்பிலும், காவல் பணியிலும் பெண் அதிகாரிகள் மிகப் பெரிய, ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அதிகாரிகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், தங்கள் மீது தாங்களே நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார். தன்னம்பிக்கையும் பயிற்சியின் போது ஏற்படுத்திக் கொள்ளும் வலிமையும் அன்றாட சவால்களை அதிகாரிகள் கையாள்வதற்குக் கருவியாக அமையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
***
(रिलीज़ आईडी: 1587602)
आगंतुक पटल : 132