குடியரசுத் தலைவர் செயலகம்
நான்கு நாடுகளின் தூதர்கள் குடியரசுத் தலைவரிடம் நியமனப் பத்திரங்களை அளித்தனர்
Posted On:
28 AUG 2019 12:42PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 28, 2019) நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னாப்பிரிக்க ஹைகமிஷனர் சீனா, சோமாலியா, கிரீஸ் ஆகியவற்றின் தூதர்கள் நியமனப் பத்திரங்களைக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்திடம் அளித்தனர்.
நியமனப் பத்திரங்களை அளித்த தூதர்கள் வருமாறு:
- திரு. ஜோயல் சிபுசிஸோ டெப்லெ, தென்னாப்பிரிக்கக் குடியரசின் ஹைகமிஷனர்
- திரு. சூன் வெய்டோங், சீன மக்கள் குடியரசின் தூதர்
- திருமதி. ஃபாதுமா அப்துல்லாஹி முஹமது, சோமாலியா கூட்டமைப்பு குடியரசின் தூதர்
- திரு. டையோனிசியோஸ் கிவிடோஸ், கிரீஸ் தூதர்
--------
(Release ID: 1583212)
Visitor Counter : 153