பிரதமர் அலுவலகம்

இது பாலின நீதிக்குக் கிடைத்த வெற்றி; சமூகத்தில் இது மேலும் சமநிலையை உருவாக்கும்: முத்தலாக் மசோதா நிறைவேறியது குறித்துப் பிரதமர் கருத்து

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUL 2019 8:53PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இஸ்லாமிய பெண்கள் (திருமணத்தில் உரிமையைப் பாதுகாத்தல்) மசோதா, 2019ஐ நிறைவேற்ற ஒத்துழைப்பு அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர்கள் சரியான சமயத்தில் முன்வந்துள்ளனர் என்றும், இந்த முயற்சி இந்தியாவின் வரலாற்றில் இடம் பெறும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

இதனையொட்டி அவர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பது: “இறுதியாக, பழமையான மற்றும் ஆதிகால நடைமுறை ஒன்று வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்டுள்ளது! நாடாளுமன்றம் முத்தலாக் முறையை ஒழித்து, நெடுங்காலமாக இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் தவறைத் திருத்தியுள்ளது.  இது பாலின நீதிக்கு கிடைத்த வெற்றி. இது சமூகத்தில் சமநிலையை மேலும் அதிகரிக்கும்.  இந்தியா இன்று மகிழ்ச்சியடைகிறது!”

மற்றொரு டுவிட்டர் பதிவில் “முத்தலாக் நடைமுறையினால், பெரும் துயரத்தை அனுபவித்த இஸ்லாமியப் பெண்களின் தைரியத்திற்குத் தலைவணங்கும் தருணம் இது.  முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது, பெண்கள் அதிகாரத்திற்குப் பங்களிக்கும். மேலும் பெண்களுக்கு நமது சமூகத்தில் கிடைக்க வேண்டிய மரியாதையை இது அளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

 

 

Narendra Modi

✔@narendramodi

 

 

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இஸ்லாமியப் பெண்கள் (திருமணத்தில் உரிமையைப் பாதுகாத்தல்) மசோதா, 2019 நிறைவேற ஒத்துழைப்பு அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றி. அவர்கள் சரியான சமயத்தில் முன்வந்துள்ளனர். மேலும், இந்த முயற்சி இந்தியாவின் வரலாற்றில் இடம் பெறும்.

 

 

30.2K

7:24 PM - Jul 30, 2019

Twitter Ads info and privacy

 

6,562 people are talking about this

 

 

Narendra Modi

✔@narendramodi

 

இறுதியாக, பழமையான மற்றும் ஆதிகால நடைமுறை ஒன்று வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்டுள்ளது!

 

நாடாளுமன்றம் முத்தலாக் முறையை ஒழித்து, நெடுங்காலமாக இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் தவறைத் திருத்தியுள்ளது.  இது பாலின நீதிக்குக் கிடைத்த வெற்றி. இது சமூகத்தில் சமநிலையை மேலும் அதிகரிக்கும்.

 

இந்தியா இன்று மகிழ்ச்சியடைகிறது!

 

 

63.5K

7:22 PM - Jul 30, 2019

Twitter Ads info and privacy

 

18K people are talking about this

 

 

Narendra Modi

✔@narendramodi

 

முத்தலாக் நடைமுறையினால், பெரும் துயரத்தை அனுபவித்த இஸ்லாமியப் பெண்களின் தைரியத்திற்குத் தலைவணங்கும் தருணம் இது. 

 

முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது, பெண்கள் அதிகாரத்திற்குப் பங்களிக்கும். மேலும் பெண்களுக்கு நமது சமூகத்தில் கிடைக்க வேண்டிய மரியாதையை இது அளிக்கும்

 

 

29.6K

7:25 PM - Jul 30, 2019

Twitter Ads info and privacy

 

7,655 people are talking about this

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1580809) வருகையாளர் எண்ணிக்கை : 214
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada