மத்திய அமைச்சரவை
குரூப் “ஏ” சேவைக்கு வழங்கப்படும் தொகையை குரூப் “ஏ” செயற்பாட்டு படைப்பிரிவு அதிகாரிகளுக்கும் வழங்கும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Posted On:
03 JUL 2019 4:37PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை, குரூப் “ஏ” சேவைக்கு வழங்கப்படும் தொகையை குரூப் “ஏ” செயற்பாட்டு படைப்பிரிவு அதிகாரிகளுக்கும் வழங்கும் யோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் மற்ற சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதிய உயர்வும், பதவி உயர்வும், மத்திய ஆயுதக் காவல்படையினருக்குக் கிடைக்கும்.
இத்தகைய ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் பல ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தபோது, உச்சநீதிமன்றமும், தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பையே உறுதி செய்தது. அதனை செயல்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-----
(Release ID: 1576903)
Visitor Counter : 255