மத்திய அமைச்சரவை

ஹோமியோபதியில் சீர்திருத்தங்கள்

Posted On: 12 JUN 2019 7:53PM by PIB Chennai

மத்திய ஹோமியோபதி கவுன்சில் பதவிக் காலம் 2018 மே 18ல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் படுகிறது

ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2019-க்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தாக்கம்:

மத்திய கவுன்சிலை மாற்றி அமைப்பதற்கான கால அவகாசத்தை இப்போதைய ஓராண்டு காலத்தில் இருந்து இரண்டு ஆண்டு காலமாக நீட்டிக்க மசோதா வகை செய்கிறது. நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை 2019 மே 17ல் இருந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

மத்திய ஹோமியோபதி கவுன்சில் தனது அதிகாரங்களை அமல் செய்வதற்கும் கவுன்சிலின் பணிகளை ஆற்றுவதற்கும் இது உதவியாக இருக்கும்.

அமலாக்கம்:

மத்திய ஹோமியோபதி கவுன்சில் (திருத்த) அவசரச் சட்டம், 2019 -க்கு மாற்றாக இது அமைந்து, கவுன்சிலின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக இருக்கும்.

பின்னணி:

மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் செயல்பாடுகள், நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த ஹோமியோபதி டாக்டர்கள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த நிர்வாகிகளைக் கொண்ட இயக்குநர்கள் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கவுன்சில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஹோமியோபதி மாநில பதிவேடுகள் அப்டேட் செய்யப்படாததாலும், பொதுத்தேர்தல் வந்துவிட்டதாலும் ஓராண்டு காலத்துக்குள் கவுன்சில் மாற்றி அமைக்கப்படாமல் போனதால், பதவிக் காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

*****



(Release ID: 1574273) Visitor Counter : 96