மத்திய அமைச்சரவை
நிலத்தின் அளவு எத்தகையதாக இருந்தபோதும் விவசாய குடும்பங்கள் அனைத்தையும் தகுதி உள்ளதாக்க பிஎம்-கிசான் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
प्रविष्टि तिथि:
31 MAY 2019 8:44PM by PIB Chennai
முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு – பிஎம்-கிசான் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் நீடிப்பு.
பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அளித்த பெரிய வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார்.
இந்தத் திட்டத்தின்மூலம் தற்போது 14.5 கோடி விவசாயிகள் பயன்பெறவுள்ளனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் அனைவரும் எதிர்பார்த்த பிஎம்-கிசான் நிதித் திட்ட விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவின் படி, நிலம் வைத்துள்ள தகுதியான விவசாயக் குடும்பங்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடையலாம்.
திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் மேலும் இரண்டு கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனாளிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக அதிகரிக்கும். மத்திய அரசுக்கு 2019-20 நிதியாண்டில் ரூ.87,217.50 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
****************
(रिलीज़ आईडी: 1573113)
आगंतुक पटल : 327