பிரதமர் அலுவலகம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 17 APR 2019 11:58AM by PIB Chennai

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் புயலினால் நிகழ்ந்த உயிர் இழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நிலைமை மிகத் துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் புயலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா இரண்டு லட்ச ரூபாயை நிவாரண நிதியாக அளிக்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இயற்கை பேரிடரில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 அளிக்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1570960) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati