மத்திய அமைச்சரவை

இந்தியா – கொரியா குடியரசு இடையே கூட்டாக அஞ்சல்தலை வெளியிடுவது தொடர்பாக அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 15 APR 2019 12:34PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய  அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – கொரியா குடியரசு இடையே பிப்ரவரி 2019ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 
இந்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறையும், கொரிய குடியரசும் இணைந்து,  "கொரியாவின் ராணி ஹூ ஹேவாங்-ஓக்"  என்ற தலைப்பிலான அஞ்சல் தலை ஒன்றை வெளியிட பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளன. 
இந்த கூட்டு அஞ்சல் தலைகள், 2019 இறுதியில்,  இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் தேதியில் வெளியிடப்படும்.

 

                                  *******


(வெளியீட்டு அடையாள எண்: 1570640) வருகையாளர் எண்ணிக்கை : 208
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati