மத்திய அமைச்சரவை
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தான் ஓய்வூதியத் திட்டத்திற்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பொது சேவை மையங்களை சேர்க்கை முகமைகளாக சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
28 FEB 2019 11:03PM by PIB Chennai
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தான் ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பொது சேவை மையங்களை சேர்க்கை முகமைகளாக சேர்ப்பதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதோடு மற்ற அமைச்சரவைகள் / துறைகள் / நலவாரியங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு முகமைகளில் சந்தாதாரர் பங்குகளுக்கு பதிலாக பங்குச்சந்தை வைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
பயன்பாடு :
இந்த ஒப்புதலின் காரணமாக 60 வயதை எட்டிய முறைசாரா துறையைச் சேர்ந்த ஊழியர்கள், சமூக பாதுகாப்பாக மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறுவார்கள்.
*****
(रिलीज़ आईडी: 1566842)
आगंतुक पटल : 127