பிரதமர் அலுவலகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளை பிரதமர் நாளை வழங்குகிறார்
प्रविष्टि तिथि:
27 FEB 2019 6:53PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் 28.02.2019-அன்று நடைபெறும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பார்.
விருதாளர்களுக்கு 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளை பிரதமர் வழங்குவார். பங்கேற்பாளர்களிடையே அவர் உரை நிகழ்த்துவார்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் நிறுவனர் இயக்குநரான டாக்டர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பெயரில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் இந்தியர்களின் சிறப்புமிக்கப் பணிகளை அங்கீகரிக்கும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.
******
(रिलीज़ आईडी: 1566583)
आगंतुक पटल : 232