மத்திய அமைச்சரவை

சுற்றுலாத்துறையில் இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 FEB 2019 9:08PM by PIB Chennai

சுற்றுலாத்துறையில் இந்திய சுற்றுலா அமைச்சகத்திற்கும், சவுதி அரேபிய அரசாட்சியின் சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய சவுதி ஆணையத்திற்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள்கள் :

  1. சுற்றுலா வளர்ச்சி மற்றும் அது சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றிய  தகவல் பரிமாற்றம், 

2) சுற்றுலா சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் இத்துறையின் நிபுணர்கள், ஊடகவியலாளர்களின் பரிமாற்றம்,

  1. சம்பந்தப்பட்ட நாடுகளில் சுற்றுலா முதலீட்டுக்கான வாய்ப்புக்களின் அறிமுகம்; சுற்றுலாத் திட்டங்களின் பரஸ்பர முதலீட்டை ஊக்குவித்தல்.

4) சுற்றுலா வளர்ச்சியின் பங்களிப்பில் இருதரப்பினரும் சுற்றுலா சார்ந்த நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதை ஊக்குவித்தல்,

5) இருதரப்பினரும் சுற்றுலா சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிக்கான அரசு மற்றும் தனியார் கல்வி வசதிகளை ஊக்குவித்தல்,

  1. சுற்றுலாத்துறையில் புதுமையான அனுபவம், தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை சேவைகளின் பரிமாற்றம்

7) சுற்றுலா விவகாரங்களின் சர்வதேச பேரவைகளிலும், அமைப்புக்களிலும் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு

                                    ***



(Release ID: 1564433) Visitor Counter : 93