மத்திய அமைச்சரவை

விண்வெளியின் அமைதியான பயன்பாட்டிற்கான ஒத்துழைப்பிற்கு இந்தியா - ஃபின்லாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 FEB 2019 9:28PM by PIB Chennai

விண்வெளியின் அமைதியான பயன்பாட்டிற்கான ஒத்துழைப்பிற்கு இந்தியாவிற்கும் ஃபின்லாந்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதியன்று ஏற்கெனவே கையெழுத்தானது.

தாக்கம் :

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், புவி மண்டலத்தின் தொலையுணர்தல் துறையில் புதிய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் செயல்பாட்டிற்கான வாய்ப்புக்கள்; செயற்கைக் கோள் தகவல் தொடர்பு; செயற்கைக் கொள் ஊடுருவல்; விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றுக்கு புது உத்வேகம் அளிக்கும்.

ஃபின்லாந்து அரசுடனான ஒத்துழைப்பு மனித இனத்தின் நலனுக்கென விண்வெளி தொழில்நுட்பத் துறையில் கூட்டு நடவடிக்கையை வளர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

 

 

விளக்கம் :

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், புவி மண்டலத்தின் தொலையுணர்தல், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஊடுருவல், விண்வெளி அறிவியல் மற்றும் கோள்களின் ஆய்வு, விண்வெளி இலக்குகள் மற்றும் தரையில் செயல்படும் முறைகளின் வளர்ச்சி, பரிசோதனை மற்றும் இயக்கம், இந்திய செயற்கைக்கோள் செலுத்துவாகனங்களை ஃபின்லாந்து நாட்டின் விண்வெளி இலக்குகளில் செலுத்துவது, விண்வெளி தகவல் தொகுப்பின் பயன்பாடு, விண்வெளி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியும், புதிய செயலிகளையும், தீர்வுகளையும் வளர்ப்பது மற்றும் விண்வெளியின் நீடித்த பயன்பாட்டோடு வளர்ந்து வரும் புதிய விண்வெளி வாய்ப்புக்கள் மற்றும் தகவல் தொகுப்பு முறைகளுக்கான ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இதில் பங்கேற்போர் அல்லது அவர்களது அதிகாரத்தோடு செயல்படும் முகமைகள், அதற்கான ஏற்பாட்டின் கீழ் குறிப்பிட்ட ஒத்துழைப்பு திட்டங்களின் மேலாண்மைக்கு தேவைப்பட்டால் திட்டக்குழுக்களை அமைக்கலாம்.

 

                                                                        *****



(Release ID: 1564409) Visitor Counter : 153