மத்திய அமைச்சரவை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே, சுரங்க பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஓப்புதல்

Posted On: 16 JAN 2019 4:10PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,  இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்திற்கு உட்பட்ட,  சுரங்கப் பாதுகாப்பு தலைமை இயக்குநர் மற்றும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து  அரசின் இயற்கை வளங்கள், சுரங்கம் மற்றும் எரிசக்தித்துறைக்கு உட்பட்ட சுரங்க பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விளைவு

   இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் சுரங்க பாதுகாப்பு தலைமை இயக்குநர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிம்தார்ஸ் (சுரங்க பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்)  இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவும்.

· அபாயகரமான பாதுகாப்பு  மேலாண்மை முறை மற்றும் பயிற்சி வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வரும்,

· மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் இதர தொழில்நுட்ப ரீதியான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல், பணியிடப் பாதுகாப்பு  மற்றும் சுகாதார பயிற்சி மையம், மற்றும் தேசிய சுரங்க பேரிடர் மையத்தை அமைத்தல், மற்றும்

· சுரங்க பாதுகாப்பு தலைமை இயக்ககத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு ஆய்வுக் கூடங்களை நவீனப்படுத்துதல்.

நடைமுறை செயல்திட்டம்:

      இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான தினத்திலிருந்து 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

----

 

 



(Release ID: 1560174) Visitor Counter : 144