மத்திய அமைச்சரவை

தேசிய நீர்மின் கழகம் , வடகிழக்கு மின் உற்பத்திக் கழகம் தேரி நீரியல் வளர்ச்சிக் கழகம் மற்றும் சட்லஜ் ஜல் வித்யூத் நிகாம் ஆகிய நிறுவனங்களில், வாரிய நிலைக்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கான சம்பள வீதங்களை, 01.01.1997 முதல் வரன்முறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 JAN 2019 4:07PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய எரிசக்தித்துறை  04.04.2006 மற்றும் 01.09.2006 தேதிகளில் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், தேசிய நீர்மின் கழகம் (NHPC), வடகிழக்கு மின் உற்பத்திக் கழகம் (NEEPCO), தேரி நீரியல் வளர்ச்சிக் கழகம் (THDC), மற்றும் சட்லஜ் ஜல் வித்யூத் நிகாம் (SJVN) ஆகிய நிறுவனங்களில், வாரிய நிலைக்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கான சம்பள வீதங்களை, 01.01.1997 முதல் வரன்முறைப்படுத்த ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது.

நடைமுறை செயல்திட்டம்:

 இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, மத்திய எரிசக்தித் துறை 04.04.2006 மற்றும் 01.09.2006 தேதிகளில் பிறப்பித்த உத்தரவு, மத்திய பொதுத்துறை  நீர்மின் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பள வீதங்கள் முறைப்படுத்தப்படும்.

விளைவு:

    மத்திய பொதுத்துறை  நீர்மின் நிறுவனங்களில், 01.01.2007-க்கு முன் பணியில் சேர்ந்த சுமார் 5,254 அதிகாரிகள் இதன் மூலம் பயனடைவார்கள். இது அந்த அதிகாரிகளின் மன உறுதியை வலிமைப்படுத்தி, அவர்கள் பணியில் ஊக்கத்துடன் செயல்பட வழிவகுக்கும்.

செலவு விவரம்:

      ஊதிய வீதங்கள் முறைப்படுத்தப்படுவதன் காரணமாக மொத்தம் ரூ.323 கோடி அளவிற்கு செலவு ஏற்படும்.

---------



(Release ID: 1560171) Visitor Counter : 107