பிரதமர் அலுவலகம்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்.
प्रविष्टि तिथि:
12 JAN 2019 10:55AM by PIB Chennai
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்தார்.
“எழுமின், விழிமின், இலக்கை எட்டும் வரை நிற்காதீர்கள் என்ற சக்திவாய்ந்த சொற்களையும், வளமான சிந்தனைகளையும் மதிப்பிற்குரிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் நினைவுகூருகிறேன். சேவை மற்றும் துறவு சிந்தனைகளை அவர் வலியுறுத்தினார். இளைஞர் சக்தி மீது அவருக்கு ஊசலாட்டம் இல்லாத நம்பிக்கை இருந்தது.
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், கோட்பாடுகளும் கோடிக்கணக்கான இந்தியர்களை, குறிப்பாக நமது இளைஞர்களைக் கவர்ந்தன; ஊக்கப்படுத்தின. வலுவான, துடிப்புமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும், பல துறைகளில் உலகத் தலைமையை இந்தியா ஏற்க வேண்டும் என்ற ஈடுபாட்டை அவரிடம் இருந்துதான் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***************
(रिलीज़ आईडी: 1559709)
आगंतुक पटल : 194