நிதி அமைச்சகம்
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான இருதரப்பு மாற்றிக்கொள்ளும் உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
10 JAN 2019 8:46PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான இருதரப்பும் மாற்றிக்கொள்ளும் உடன்படிக்கைக்கு (பீ.எஸ்.ஏ.) ஒப்புதல் வழங்கியதுடன், இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்.பி.ஐ.), பேங்க் ஆஃப் ஜப்பானுடன் அதிகபட்சமாக 75 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருதரப்பும் மாற்றிக்கொள்ளும் உடன்படிக்கையில் கையெழுத்திடவும் அதிகாரமளித்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான இந்த மாற்றிக்கொள்ளும் உடன்படிக்கை என்பது, பிரதானமாக, அந்நிய செலவாணியில் குறுகிய கால பற்றாக்குறையை எதிர்க்கொள்ளும்வகையில் நிலுவை செலுத்துதல்களில் உரிய அளவினை பராமரிப்பதற்காக, அதிகபட்சமாக 75 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பரிமாற்றம் மற்றும் மீள்-பரிமாற்றத்திற்கானதாகும்.
நன்மைகள்
கடினமான நேரங்களில் ஒருவருக்கொருவர் உதவுதல் என்ற மூலோபாய நோக்கத்திற்கும் மற்றும் சர்வதேச நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும், இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பின் மிகச் சிறந்த உதாரணமாக இந்த இருதரப்பும் மாற்றிக்கொள்ளும் உடன்படிக்கை (பீ.எஸ்.ஏ.) உள்ளது. இந்த வசதி, பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒப்புகொண்ட மூலதன தொகை இந்தியாவிற்கு கிடைத்திட செய்யும். மேலும், இந்த உடன்படிக்கையினால், நாட்டின் அந்நிய செலவாணி பரிமாற்ற விலை நிலைத்தன்மையின் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்பட்டு, இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு மூலதனங்களை பெறுவதை அதிகரிக்கச் செய்யும். நிலுவை செலுத்துதல்களின் (பீ.ஓ.பி.) காரணமாக ஏற்படும் சிரமங்களை கடந்து செல்லும் வகையிலும், உள்நாட்டு நாணயத்தின் மீதான ஊகத் தாக்குதல்களை தடுக்கும் வகையிலுமான இந்த மாற்றிக்கொள்ளும் வசதி, நாணய பரிமாற்ற விலையின் ஏற்ற இறக்கத்தை சீராக வைப்பதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் திறனை பெரிதும் அதிகரிக்கும்.
இந்த உடன்படிக்கையானது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டின் மற்றொரு மைல்கல்லாகும்.
******
(Release ID: 1559528)