மத்திய அமைச்சரவை

பாங்க் ஆப் பரோடாவுடன் விஜயா வங்கி, தேனா வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 JAN 2019 5:55PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், பாங்க் ஆப் பரோடாவுடன் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய இரு வங்கிகளும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைந்து செயல்படும்.

இதன்படி இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனமான மூன்று வங்கிகள் முதல் முறையாக இணைக்கப்படுகின்றன.

இந்த இணைப்பு உலகளாவிய பொருளாதார அளவில் வங்கிகளுக்கு இடையிலான வலுவான போட்டித் தன்மைக்குப் பெரிதும் துணைபுரியும். பரந்துபட்ட அளவிலான இணைப்பின் தேவையையும் உணர்த்தும். அத்துடன், மூன்று வங்கிகளின் இணைப்பு வங்கிகளின் விரிவான சேவைகளையும், வாடிக்கையாளர்களுக்கு சுமையில்லாத சேமிப்புத் திட்டம், வங்கிகளின் துணை நிறுவனங்கள் ஆகியவற்றையும் ஊக்குவிக்க வழி வகுக்கும். இது வாடிக்கையாளர் சார்ந்த மேம்பாடு, சந்தை அதிகரிப்பதற்கான திட்டம், செயல் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் உதவும். அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு எளிதில் சேவையாற்றத் துணை புரியும்.

இணைப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்”

 (a) விஜயா வங்கியும் தேனா வங்கியும் இணைக்கப்படும் வங்கிகளாகும். இவற்றை பாங்க் ஆப் பரோடா தனக்குள் இணைத்துக் கொள்ளும்.

(b) இந்த இணைப்புத் திட்டம் 2019 ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வரும்.

(c) இந்த இணைப்பு அனைத்து வர்த்தகங்கள், சொத்துகள், உரிமைகள், சொத்துடைமை, கேட்புகள், ஒப்புதல்கள் மற்றும் கடன்கள், சேமிப்புகள், உத்தரவாதங்கள் ஆகிய அனைத்தும் வங்கிகளை இணைத்துக் கொள்ளும் பாங்க் ஆப் பரோடாவுக்கு மாற்றப்படும்.

(d) மாற்றப்படும் வங்கிகளின் ஒவ்வொரு அலுவலரும், ஊழியரும் வங்கிகளை இணைத்துக் கொள்ளும் பாங்க் ஆப் பரோடாவின் அலுவலராகவும் ஊழியராகவும் மாற்றப்படுவர். தாங்கள் பணியாற்றி வந்த வங்கிகளில் பெற்ற ஊதியம், படிகள் ஆகியவற்றுக்குக் குறையாத ஊதியம் படிகளை இணைக்கப்படும் வங்கியில் பெறுவர்.

(e) அதைப் போல் மற்ற வங்கிகளை இணைத்துக் கொள்ளும் வங்கியின் இயக்குநர் குழு மாற்றப்படும். ஊழியர்கள், அலுவலர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாக்க உறுதி செய்யவேண்டும்.

(f) மாற்றப்பட்ட வங்கிகளின் பங்குதாரர்களுக்கு இணைக்கும் பாங்க் ஆப் பரோடா பங்கு விகிதப்படி உரிய பங்குகளை அளிக்கும். மாற்றப்படும் வங்கிகள், இணைக்கும் வங்கி ஆகியவற்றின் பங்குதாரர்களுக்கு பங்குப் பரிமாற்றம் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால், வல்லுநர் குழுவின் மூலமாக அவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம்.

 

வங்கிகளின் இணைப்பை அடுத்து உருவாகும் சில வலிமைகள்:

 

  • இணைக்கப்பட்ட வங்கி வளரும் பொருளாதாரத்தில் கடன்தேவைகளைப் பூர்த்தி செய்யும் சூழலை அமைக்கும் வகையில் திறன் பெறும். வளங்களைப் பெருக்கும் ஆற்றலையும் பெறும். பொருளாதார அளவு, வாய்ப்பு ஆகியவை லாபகரத்தை மேம்படுத்தவும், பல திட்டங்களை வழங்கவும், தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கவும், சிக்கனத்துக்கான சிறந்த வழிகளைக் கடைப்பிடிக்கவும், ஆபத்துகளைச் சமாளிக்கவும் இது துணை புரியும்.
  • உலக வங்கிகளுடன் ஒப்பிடக் கூடிய அளவுகோலை உருவாக்கவும் துணை புரியும். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வங்கிகளுடன் போட்டியிடும் ஆற்றலைப் பெறும்.
  • ஒவ்வொரு வங்கியும் தனித்தனியே கொண்டுள்ள பலம், சந்தையை அடைதல், செயல்பாட்டுத் திறன் ஆகியவை இந்த இணைப்பினால் மேம்படும். தேனா வங்கி எளிய வகையில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விஜயா வங்கி லாபகரமாக இயங்குகிறது. வளர்ச்சி பெறும் மூலதனத்தைக் கொண்டுள்ளது. இவற்றுடன் பாங்க் ஆஃப் பரோடாவின் உலகளாவிய இணைப்பு, பல திட்டங்கள் ஆகியவை இந்த இணைப்பின் மூலம் மேம்படும்.
  • இணைக்கப்படும் வங்கிகள் திறமை மிக்கவர்களை எளிதில் அடைய இயலும். அத்துடன், விரைவான டிஜிட்டல் செயல்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய தகவல் திரட்டு உருவாக்கப்படும். விரிவாக அடைவதன் மூலமும் பங்கீடு, அதற்கான செலவைக் குறைத்தல் ஆகிய பலன்கள் கிட்டும்.
  • வலுவான இணைவின் மூலம் வங்கிகளின் சேவை பொதுமக்களுக்கும் விரிவான வகையில் கிட்டும். எளிதில் அணுக  இயலும். கடன் உதவி பெறுதலும் எளிதாகும்.

 

*****



(Release ID: 1558366) Visitor Counter : 249