மத்திய அமைச்சரவை

இந்தியாவுக்கும் வெளிநாட்டு நிதி நுண்ணறிவுப் பிரிவுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கான மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்த திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 DEC 2018 9:38PM by PIB Chennai

தகவல் பரிமாற்றத்திற்கென இந்திய நிதி நுண்ணறிவு பிரிவுக்கும்  வெளிநாட்டு நிதி நுண்ணறிவுப் பிரிவுகளுக்கும் இடையே மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் திருத்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எக்மாண்ட் குழு செயலகத்தின் திருத்தப்பட்ட மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்தம் 2014 அடிப்படையில் இந்த திருத்தப்பட்ட மாதிரி புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு உருவாக்கப்பட்டது.

பின்னணி

வெளிநாட்டு நிதி நுண்ணறிவுப் பிரிவுகள் தொடர்பான இந்திய நிதி நுண்ணறிவு பிரிவின் முக்கிய பணிகள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது : வெளிநாட்டு நிதி நுண்ணறிவுப் பிரிவுகளின் வேண்டுகோள்களை கையாள்வது, வெளிநாட்டு நிதி நுண்ணறிவுப் பிரிவுகளுக்கு தகவல்களை அளிப்பது, வெளிநாட்டு நிதி நுண்ணறிவுப் பிரிவுகளுடன் உறவுகளை உருவாக்கி பராமரிப்பது, வெளிநாட்டு நுண்ணறிவுப் பிரிவுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நிர்வாக வசதிகள் ஏற்படுத்துதல். தகவல் பரிமாற்றத்திற்கென வெளிநாட்டு நிதி நுண்ணறிவு பிரிவுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

 

 

 

*****

சிஜெகோ

 



(Release ID: 1555226) Visitor Counter : 174