மத்திய அமைச்சரவை
விண்வெளி அறிவியல், தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் துறையில் இந்தியா-அல்ஜீரியா இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2018 9:24PM by PIB Chennai
விண்வெளி அறிவியல், தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் துறையில் இந்தியா-அல்ஜீரியா இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 19, 2018 அன்று பெங்களூருவில் கையெழுத்தானது.
முக்கிய அம்சங்கள்
புவியின் தொலையுணர்வு; செயற்கைக்கோள் தகவல் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையில் கண்காணிப்பு; விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் கண்டறிதல், விண்கலன், விண்வெளி முறைமைகள், புவி நிலைமைகள் குறித்த ஆய்வுகள்; விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்ட விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பைத் தொடருவதற்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்யும்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், அல்ஜீரிய விண்வெளி முகமை ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுப் பணிக்குழு அமைக்க இது வகைசெய்யும். இந்தக்குழு காலவரம்பு உள்ளிட்டவற்றுக்குத் திட்டமிடுவதோடு, ஒப்பந்த அமலாக்கத்திற்கான வழிவகைகளையும் கண்டறியும்.
தாக்கம்
புவியின் தொலையுணர்வு; செயற்கைக்கோள் அடிப்படையில் கண்காணிப்பு; விண்வெளி அறிவியல், கோள்கள் கண்டறிதல் ஆகிய துறைகளில் புதிய ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் பயன்பாட்டு சாத்தியங்களை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும். மனித குல நலனுக்காக விண்வெளித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் கூட்டு நடவடிக்கையை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இதன் மூலம் நாட்டின் அனைத்துப் பிரிவினரும், பகுதியினரும் பயனடைவார்கள்.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1555076)
வருகையாளர் எண்ணிக்கை : 169